பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருக்கக் கூடாது: ஷெரீப்

By செய்திப்பிரிவு

பிரிவினைவாத தலைவர்களுடனான ஆலோசனை என்பது புதிய நடைமுறை இல்லை. அதை காரணம்காட்டி இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை, இந்திய அரசு ரத்து செய்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

நேபாளத்தில் நடைபெற்ற 18-வது சார்க் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு இஸ்லாமாபாத் திரும்பியபோது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

ஷெரீப் கூறியதாவது: "இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறும்போதெல்லாம், பாகிஸ்தான் தரப்பில் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கமானதே. காஷ்மீர் பிரச்சினையில் நேரடியாக தொடர்புடையவர்கள் பிரிவினைவாத தலைவர்கள் என்பதாலேயே அவர்களிடம் பாகிஸ்தான் எப்போதும் கருத்து கேட்கிறது. எனவே, பிரிவினைவாத தலைவர்களுடனான ஆலோசனை என்பது புதிய நடைமுறை இல்லை. அதை காரணம்காட்டி இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை, இந்திய அரசு ரத்து செய்திருக்கக் கூடாது" என்றார்.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி, இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்களிடையேயான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், "பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசுவது சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இந்திய வெளியுறவுச் செயலரின் ஆகஸ்ட் 25-ம் தேதி இஸ்லாமாபாத் பயணம் ரத்து செய்யப்படுகிறது" என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்