இலங்கை குண்டுவெடிப்பு வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், காவல் துறை தலைவர் கைது

இலங்கை குண்டு வெடிப்புவழக்கில், அந்நாட்டின் முன்னாள்பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் அந்நாட்டின் காவல்துறை தலைவர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் உள்ள தேவாலயங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களையும் இந்தியஅதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளனர். ஆனால், இந்த எச்சரிக்கையை இலங்கை அதிகாரிகள் கவனக்குறைவாக எடுத்துக்கொண்டதால், இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், நட்சத்திர விடுதியில் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தலாம் என ஏற்கெனவே தகவல் கிடைத்திருந்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்ததால், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவையும், காவல்துறைத் தலைவர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரையும் ராஜினாமா செய்யுமாறு, அதிபர் மைத்திரிபால சிறிசேனா வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ராஜினாமா செய்தார். காவல்துறை தலைவர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், ஹேமசிறி பெர்ணான்டோவும், பூஜித் ஜயசுந்தரவும் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் வழக்குதொடர்பாக, கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வு அலுவலகத்துக்கு விசாரணைக்காக நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். இருவரிடமும் வாக்குமூலங்களை பெற்ற குற்றப் புலனாய்வு அதிகாரிகள், தீவிரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறியதாக இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

10 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்