ஈரானின் முடிவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அமெரிக்கா ஒருதலைப்பட்சமாகத் தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்ததே யுரேனியம் குறித்த ஈரானின் முடிவுக்குக் காரணமாக இருக்கிறது.

ஈரான் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனிய இருப்பை அதிகரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை ஈரான் அரசு உறுதிப்படுத்தியது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் கூறும்போது, ''யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது மட்டுமல்லாமல், ஒருதலைப்பட்ச தடைகள் மற்றும் ஈரான் மீது தொடர்ச்சியாக அதிகாரத்தைப் பயன்படுத்தியது.இதன் விளைவாக உலக அளவில் பிரச்சினை உருவாகியு ள்ளது” என்றார்.

அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைதான் ஈரானின் சமீபத்திய முடிவுக்குக் காரணமாகியுள்ளது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா மோதல் வலுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்