வெர்ஜினியா வன்முறைக்கு இரு தரப்பினரும் காரணம்: ட்ரம்ப்

By ஏபி

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் தவறுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப் போரில் பங்கேற்ற படை தளபதி ராபர்ட் எட்வர்டு லீயின் உருவச் சிலையை அகற்ற வெர்ஜினியா அரசு முடிவு செய்ததையடுத்து. குறிப்பிட்ட வெள்ளை இன மக்கள் சார்லோட்டஸ்வில்லே நகரில் இனவெறிக்கு எதிராக பேரணி நடத்தினர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று, பேரணியாக சென்றவர்கள் மீது மோதியது இதில் பெண் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து வெர்ஜினியாவிலுள்ள வெள்ளை இனத்தவரின் இருதரப்புக்குகிடையே வன்முறை ஏற்பட்டது.

வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து வெர்ஜினியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளிக்காமல் இருந்தது குறித்து எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் பேசும்போது, “இந்த வன்முறை சம்பவத்தில் ( வெள்ளை இனவாத அமைப்பினர், நியோ-நாஜி இயக்கத்தினர்) இரு தரப்பினர் மீதும் தவறுள்ளது” என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் நேர்மையான கருத்து என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தவும்  ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

27 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

36 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்