தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தான்

தெற்காசியாவிலேயே மிகப் மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஓட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தானின் தேசியக் கொடி, 400 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில், “உலகளவில் இது எட்டாவது மிகபெரிய கொடி”என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி பாஜ்வா சுதந்திர தின உரையில் பேசும்போது, ”நமது நாடு நீதி, அரசியலைப்பு சட்டத்தின்படி பயணித்து கொண்டிருக்கிறது. எல்லாம் சரியாக இயங்கி கொண்டிருக்கிறது. நாம் பல தியாகங்களை செய்து இருக்கிறோம். நமக்காக உயிர் தியாகம் செய்த நமது வீரர்களை நாம் என்னாலும் மறக்க மாட்டோம்.

நமது எதிரிகளுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். எதிரிகள் வடக்கு, கிழக்கு எங்கிருந்தாலும் சரி உங்கள் தோட்டாக்கள் எங்களது வீரர்களின் மார்பை துளைக்கும் முன்னரே முடிவுக்கு வரும். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசை முறித்துக் கொள்ளும் எந்த ஒரு சக்தியும் விரைவில் அழிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

14 mins ago

சுற்றுச்சூழல்

8 mins ago

தமிழகம்

28 mins ago

ஆன்மிகம்

36 mins ago

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

43 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்