ரஷ்ய விமானப் படை தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

By செய்திப்பிரிவு

ரஷ்ய விமானப்படை சிரியாவில் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை அந்த நாட்டில் முகாமிட்டுள்ளது. ஆசாத் ஆதரவு படை ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதற்கு ரஷ்ய விமானப் படை பக்கபலமாக செயல்படுகிறது.

சிரியாவின் டியர் இஸ்-ஜார் என்ற நகருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இதைத் கண்காணித்த ரஷ்ய விமானப் படையின் போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து குண்டுகளை வீசியது. இதில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது: ஆயுதம் தாங்கிய வாகனங்கள், கவச வாகனங்கள், கனரக லாரிகளில் சென்று கொண்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ரஷ்ய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் சில பகுதிகள் இன்னமும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதிகளை மீட்க அமெரிக்க கூட்டுப் படைகள் போரிட்டு வருகின்றன. அதேநேரம் அதிபர் ஆசாத்தும் ரஷ்யாவின் உதவியுடன் ஐ.எஸ். பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள நகரங்களில் வாழும் பொதுமக்கள் பலமுனை தாக்குதல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 mins ago

சினிமா

6 mins ago

தமிழகம்

8 mins ago

கல்வி

12 mins ago

சுற்றுலா

21 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

24 mins ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்