யிங்லக் ஷினவத்ரா துபாயில் தஞ்சம்: தாய்லாந்து அரசு தகவல்

By செய்திப்பிரிவு

தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக யிங்லக் நேற்று முன்தினம் நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே கம்போடியா, சிங்கப்பூர் வழியாக யிங்லக் ஷினவத்ரா துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாகவும் அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்றும் தாய்லாந்து அரசின் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்