பிரிட்டன் அன்டார்க்டிக் பகுதியில் முதன்முறையாக திருமணம் செய்துகொண்ட தம்பதி

By பிடிஐ

பனிப் பிரதேசமான அன்டார்க்டிக் கண்டத்தின் ஒரு பகுதிக்கு பிரிட்டன் உரிமை கொண்டாடுகிறது. பிரிட்டன் அன்டார்க்டிக் (அடிலெய்டு தீவு) எனப்படும் அப்பகுதியில் முதன்முறையாக ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டனர்.

பர்மிங்காம் நகரைச் சேர்ந்த ஜூலி பவும் (34) மற்றும் ஷெபீல்டு நகரைச் சேர்ந்த டாம் சில்வெஸ்டர் (35) ஆகிய இருவரும் பனிப் பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள்தான் 0 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை நிலவும் இந்த பனிப் பிரதேசத்தில் முதன்முறையாக திருமணம் செய்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற திருமண விழாவில், பிரிட்டன் அன்டார்க்டிக் ஆய்வு நிறுவனத்தின் (பிஏஎஸ்) பெரிய ஆய்வு மையத்தில் பணிபுரியும் இந்த தம்பதியின் 18 நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மணமகளான ஜூலி கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாமும் நானும் பணியாற்றி வருகிறோம். அன்டார்க்டிகா பகுதியில் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது. பனி மலைகளையும் சுற்றுலாப் பயணிகளுடன் இங்கு நேரத்தை செலவிடுவதையும் நான் மிகவும் நேசிக்கிறேன்” என்றார்.

மணமகன் டாம் கூறும்போது, “எளிய முறையில் திருமணம் செய்து கொள்ள நாங்கள் விரும்பினோம். ஆனால், பூமியில் உள்ள மிகவும் தொலைதூரப் பகுதி ஒன்றில் திருமணம் செய்துகொள்வோம் என்று ஒருபோதும் கற்பனை செய்து பார்த்ததில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

18 mins ago

கல்வி

28 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்