ஆசியாவின் நோபல் பரிசு : 2017 - மகசேசே விருது வென்றவர்கள் விவரம்

By பிடிஐ

ஆசியாவின் நோபல் பரிசு எனக் கருதப்படும் ''ரமோன் மகசேசே விருதுகள்'' (2017) வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரமோன் மகசேசே 2017 விருதுபெற ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இவ்விருதுகள், பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக பணியாற்றும்போதே, தனது 49வது வயதில் விமான விபத்தில் உயிரிழந்த ரமோன் மகசேசேவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்விருது வழங்கும்விழா வரும் ஆகஸ்ட் 31 அன்று நடைபெற உள்ளது.தடைகளை வென்று சாதித்தவர்கள் "இவ்விருதை வென்றவர்கள் துணிந்து செயலாற்றியவர்கள்.

சிறிய அளவிலேயான சாத்தியக்கூறுகள், கடும் அச்சுறுத்தல்கள், வலுவான எதிர்ப்பு ஆகியவற்றைக் கண்டு துவளாமல் கடைசிவரை செயலில் உறுதியாக நின்றதுதான் இவ்விருது பட்டியலில் இவர்கள் இடம்பெறக் காரணம். அவர்களது அணுகுமுறைகள் அனைத்தும் மனித கவுரவத்திற்கான மரியாதை மற்றும் கூட்டு முயற்சியின் ஆற்றல் மீதான நம்பிக்கை ஆகியவற்றில் ஆழம் கொண்டுள்ளன." என்கிறார் கார்மென்சிட்டா அபெல்லா. இவர் ரமோன் மகசேசே விருது பவுண்டேஷனின் தலைவர்.

இதுகுறித்து அவர் தெரிவித்த விவரம் வருமாறு:

இஷிஸாவா, ஜப்பான்

இஷிஸாவா, ஜப்பான் நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். தென்கிழக்கு ஆசிய வரலாற்று அறிஞர். 162 ஹெக்டேரில் (400 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அங்கோர்வாட் இந்து ஆலயத்தை பாதுகாக்கும் பணியில் தன் வாழ்க்கையின் 50 ஆண்டுகாலத்தை அதற்காக செலவிட்டவர். அங்கோர்வாட் கோயில் பல்வேறு போர் மற்றும் சண்டைகளினாலும் மற்றும் பழைமைத் தன்மையினாலும் அழிய இருந்ததை தடுத்து நிறுத்திய பணி அதில் முக்கியமானது.

கெமர் ரூஜ் ஆட்சியில் அங்கோர் வாட் ஆலய பாதுகாப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. அல்ட்ரா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆட்சி 1979ல் தோல்வியடைந்த பிறகு, கம்போடிய வரலாற்றுச் சின்ன பாதுகாப்பு இயக்கங்களை அழித்தொழித்தொழிப்பு ஒரு முடிவுக்கு வந்தது. இஷிகாவா தனது சொந்த முயற்சியில் கோவிலைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். ஜப்பான் மற்றும் கம்போடியாவில் உள்ள கோவில்களைக் காப்பாற்றுவதற்கு கம்போடியர்களை மையமாக வைத்து ஒரு முயற்சியை மேற்கொண்டார்.

கெத்ஸி சண்முகம், இலங்கை

இலங்கை ஆசிரியை கெத்ஸீ சண்முகம்(82), இவர் தனது நாட்டில் முப்பது ஆண்டுகளாக நடந்துவந்த கொடூரமான யுத்தத்தித்தின் நடுவே ஆபத்தான குண்டுவெடிப்புகள், போர் மண்டலங்களில் கைது மிரட்டல்களை மீறி போரில் விதவையானவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அவர்களுக்கு வாழும் நம்பிக்கையைத் தந்தவர்.

நபாபன், இந்தோனேசியா

இந்தோனேசியாவைச் சேர்ந்த நபாபன், சுமத்ரா தீவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த காட்டு நிலத்தை அங்கு வாழும் பழங்குடியினருக்கு மீட்டுத் தந்து அவர்களது அடையாளம் மற்றும் அவர்களது அரசியல் குரல் வெளிப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர்.

டாய், சிங்கப்பூர்

டாய், குழந்தையிலேயே தந்தையால் கைவிடப்பட்டவர், வீடற்ற தனது தாயினாலும் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுவந்து விடப்பட்ட இவரும் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1983லிருந்தே தன்னார்வலர்களைக் கொண்டு சொந்தமாக சமைத்து தனது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான முதியோர்கள், புலம்பெயர்ந்த வேலையாட்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் வழங்கிவருகிறார்.

லிலியா டி லிமா, பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன் அரசு அதிகாரிகளின் குடும்பத்தில் இருந்து வந்த லிலியா டி லிமா, பிலிப்பைன்ஸ் பொருளாதார மண்டல அதிகாரசபையின் தலைவர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வேலைகள் உருவாக்கினார். அதற்காக அவர் செய்தது ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை திறந்து வைத்ததுதான். அவரது கண்காணிப்பின் கீழ், இத்தகைய ஏற்றுமதி மண்டலங்களின் எண்ணிக்கையானது எதிர்பாராதவகையில் 2,000 சதவிகிதம் அதிகரித்து 343 ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதாரமும் உயர, 6 மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

பிலிப்பைன் தியேட்டர் குழு

ஒரு தனியார் அமைப்பாகத்தான் 'பிலிப்பைன் கல்வி நாடக சங்கம்' 1967ல் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்ப நோக்கம் ஒரு தேசிய நாடகக் குழுவை உருவாக்குவது. ஆனால் அப்போது புதியதாக ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி பெஃர்டினான்ட் மாக்ரோஸ் தான் ஆட்சியேற்று சில ஆண்டுகளுக்குப் பின் ராணுவ ஆட்சியின் கீழ் நாட்டை கொண்டுவந்து விட்டார். இதனால் மக்கள் பெரும் துன்பத்தைச் சந்தித்தனர். இதனை எதிர்த்து மக்களை போராடச் செய்யும் ஒரு கருவியாக இக்குழு தங்கள் நாடக மேடைகளைப் பயன்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலினப் பிரச்சனைகள், பேரழிவிம்போது மக்கள் சேவையில் ஈடுபட்டது.

சமூக மாற்றத்திற்காக நாடகக் கலை

இந்த பிலிப்பைன் தியேட்டர் குழு "சமூக மாற்றத்திற்கான ஒரு சக்தியாக நாடக கலையை வடிவமைத்ததற்காக" இவ்விருதை வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

க்ரைம்

3 mins ago

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்