அதிபர் ட்ரம்பை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜனநாயக கட்சி எம்.பி. தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடை பெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ரஷ்ய வழக்கறிஞர் நடாலியாவை ட்ரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். இவர் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படு கிறது. ஜூனியர் ட்ரம்ப் - நடாலியா சந்திப்பு அண்மையில் அம்பலமாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்யாவின் தலையீடு காரணமாகவே அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்று ஆரம்பம் முதலே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜனநாயக கட்சி எம்.பி. பிராட் ஷெர்மேன் நாடாளுமன்ற சிறப்புக் குழுவிடம் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

இந்த தீர்மானத்தை வாக்கெடுப் புக்கு எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து சிறப்புக் குழு முடிவு செய்யும். வாக்கெடுப்பு நடைபெற்றால் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்