ஜம்மு காஷ்மீர் பற்றிய கொள்கையில் மாற்றம் இல்லை: அமெரிக்கா திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித் துள்ளது.

அமெரிக்கா அவ்வப்போது காஷ்மீர் பகுதியை வெவ்வேறு விதமாக குறிப்பிட்டு வருகிறது. குறிப்பாக, ‘இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீர்’ என்றும் ‘இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாஹுதீனை சர்வதேச தீவிரவாதி என அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அப்போது, இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு காஷ்மீர் உட்பட பல இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்த அமைப்பு காரணமாக இருந்துள்ளது எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியை அவ்வப்போது முரண் பட்ட வகையில் குறிப்பிட்டது உண்மைதான் என்று அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ள னர். அதேநேரம் காஷ்மீர் தொடர்பான கொள்கையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள் ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “காஷ்மீர் மீதான எங்கள் கொள்கை யில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பான பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இரு நாடுகளுக்கிடையே நெருங்கிய நட்புறவு மலர தேவை யான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்றார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்