‘ஒபாமாகேர்’ காப்பீடு திட்டத்தைதிரும்பப் பெறும் மசோதா தோல்வி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ‘ஒபாமாகேர்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தை திரும்பப் பெறும் மசோதா செனட் அவையில் தோல்வி அடைந்தது.

ஒபாமா அதிபராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை திரும்பப் பெறுவதில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக இருந்தார். இதற்கான மசோதா மீதான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆளும் குடியரசு கட்சியின் 3 உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் 49 -51 என்ற வாக்கு விகிதத்தில் மசோதா தோல்வி அடைந்தது.

இது, அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு கட்சியின் 3 எம்.பி.க்களும் ஜனநாயக கட்சியின் 48 எம்.பி.க்களும் அமெரிக்க மக்களை தோல்வி அடைய செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த மெக்கைன் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் இந்த மசோதாவை எதிர்த்தனர். இவர்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததது.

இது தொடர்பாக மெக்கைன் விடுத்துள்ள செய்தியில், “பல்வேறு தரப்பினரையும் ஆலோசித்து மசோதாவில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சுற்றுச்சூழல்

3 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

மேலும்