முஸ்லிம் பயணிகளுக்கு தடை விதிக்கும் புதிய உத்தரவு: அதிபர் ட்ரம்ப் நாளை கையெழுத்திடுகிறார்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் நுழைய முஸ்லிம் பயணிகளுக்கு தடை விதிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை கையெழுத்திடுகிறார்.

சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7 நாடுகளின் முஸ்லிம் அகதிகள், பயணிகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய உத்தரவை அதிபர் ட்ரம்ப் நாளை பிறப்பிக்க உள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியபோது, புதிய தடை உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வளவு நேர்த்தியாக புதிய தடையாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது விழாவிலும் ட்ரம்பின் தடை உத்தரவை ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சித்தனர். இத னிடையே புதிய உத்தரவை எதிர்த் தும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 secs ago

இந்தியா

7 mins ago

விளையாட்டு

13 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்