பாகிஸ்தான் போலியோ முகாமில் 3 ஊழியர்கள் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்பட 3 ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாள் எவ் வித அசம்பாவிதமும் நடை பெறவில்லை. 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை துறைமுக நகரான கராச்சியின் கிழக்குப் பகுதியில் 2 பெண்கள், 2 ஆண்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிக் கொண்டிருந்தனர்.

3 பேர் சுட்டுக் கொலை

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், சொட்டு மருந்து வழங்கிக் கொண்டி ருந்த 4 பேர் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் 4 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவத் துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான் தீவிர வாதிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக நம்பப்படுகிறது.

தலிபான்களே காரணம்?

சொட்டு மருந்து முகாம் என்ற பெயரில் அமெரிக்கா தங்களை வேவு பார்ப்பதாக தலிபான் தீவிரவாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தக்கூடாது என்று அந்த அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

இதன்காரணமாக கடந்த பல ஆண்டுகளாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை குறிவைத்து தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அரசு தீவிரம்

பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டில் 72 குழந்தைகள் போலியாவில் பாதிக்கப்பட்டனர். எனவே தீவிரவாதிகள் அச் சுறுத்தல் இருந்தாலும் போலியோவை அறவே ஒழிக்க அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தீவிரமாகப் பணி யாற்றி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

விளையாட்டு

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்