இலங்கை அரசிலிருந்து புத்த துறவிகள் கட்சி விலகியது

By ஏஎஃப்பி

இலங்கையில் ராஜபக்ச தலைமை யிலான அரசில் இருந்து விலகுவ தாக புத்த துறவிகள் கட்சியான தேசிய பாரம்பரிய கட்சி (ஜே.என்.யு) நேற்று அறிவித்தது.

இலங்கை அதிபரின் பதவிக் காலம் முடிவதற்கு 2 ஆண்டுகள் முன்னதாக, வரும் ஜனவரியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன் அதிபருக்கான அதிகாரங்களை ராஜபக்ச குறைக்கத் தவறி விட்டதாக கூறி ஜே.என்.யு. இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அதிபர் ராஜபக்சவின் 69-வது பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பை ஜே.என்.யு. வெளி யிட்டது.

இதுகுறித்து ஜே.என்.யு. தலைவர் ஓ.சொபிதா கூறும்போது, “அதிபருக்கு சவால் விடுத்து வெளியேறும் எதிரிப்படையாக இதை கருதக்கூடாது. அதிபர் தனது செயல்பாட்டை திருத்திக் கொள்வதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு இது.

புத்தரின் போதனைகளின்படி நண்பருக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை இது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்