‘அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும்’

By பிடிஐ

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அந்நாட்டில் அடுத்த ஆண்டு வரை அமெரிக்கப் படைகள் தங்கி யிருக்கும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படைகளில் பெரும் அளவை அடுத்த ஆண்டு வரை பராமரிக்க விரும்புகிறேன். அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகவே இந்த முடிவு எடுத்துள்ளேன். ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஐ.எஸ். தலைவர் உமர் கலிஃபாவை கொன்றதன் மூலம் அந்த அமைப்புக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினோம்.

தீவிரவாத தாக்குதல்களை முற்றிலும் தடுக்க விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருமுறை தாக்குதல் நடைபெறும்போதும் நான் ஏமாற்றம் அடைகிறேன். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் தாக்குதல் நடைபெறும்போது மட்டுமல்ல; உலகின் எந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தாலும் நான் கவலை அடைகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்