பாகிஸ்தான் மீது ஐ.நா. சபையில் ஆப்கானிஸ்தான் புகார்

By பிடிஐ

பிற நாடுகளின் இறையாண்மையை பாகிஸ்தான் மீறுகிறது என ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆப்கானிஸ் தான் புகார் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா. அளித்துவரும் உதவிகள் தொடர் பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் நிரந்தரப் பிரதிநிதி மஹ்மூத் சைக்கால் பேசியதாவது:

பாகிஸ்தான் அரசில் அங்கமாக இருக்கும் சக்திகள் தங்கள் பகுதியில் பயங்கரவாத குழுக்களை ஊக்குவிக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் ஒசாமா பின்லேடன், தலிபான் தலைவர்கள் முல்லா ஒமர், மன்சூர் என முன்னணி தீவிரவாதிகள் பலர் பாகிஸ்தானில் வசித்துள்ளனர். அங்கேயே இறந்துள்ளனர். பிற நாடுகளின் இறையாண்மையை பாகிஸ்தான் மீறிவருவதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அரசுக்கு அரசியல் உறுதியும் நேர்மையான செயல்பாடுகளுமே தேவை. அந்நாட்டுக்கு அணுசக்தி ஒப்பந் தங்களோ, எப்-16 ரக போர் விமானங் களோ தேவையில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்