மெக்சிகோவில் 13 பேரை கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 520 ஆண்டுகள் சிறை தண்டனை

By ஐஏஎன்எஸ்

மெக்சிகோவில் 13 பேரை கடத்திய வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் 2 பேருக்கு தலா 520 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம், மெக்சிகோ சிட்டியில் உள்ள ஒரு மதுபானக் குடிப்பகத் திலிருந்த 13 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வந்தது. போதைப்பொருள் விநியோகஸ்தர் கொல்லப்பட்ட தற்கு பழிவாங்கும் வகையில் இந்த சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே 8 பேருக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது. மதுபான குடிப்பக உரிமையாளர் எர்னேஸ்டோ எஸ் பினோசா லோபோ உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 500 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் 2 பேருக்கு டிசம்பர் மாதம் 520 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மரியோ அல்பெர்டோ ராட்ரிக்ஸ் லெடஸ்மா மற்றும் கேப்ரியேல் கராஸ்கோ இலிசலிடுரி ஆகிய இருவருக்கும் தலா 520 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு 2.7 லட் சம் டாலர் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

53 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்