குல்பூஷணை தூக்கிலிடக் கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த குல்பூஷண் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஈரானில் துறைமுக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை இந்திய உளவாளி என குற்றம் சாட்டி பாகிஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. அவர் மீதான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் குல்பூஷணுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பரூக் நாயக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு குல்பூஷணைத் தூக்கிலிட வேண்டும் என்று மனு வில் கோரப்பட்டுள்ளது. ஆனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 mins ago

க்ரைம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்