பாதுளை நிலச்சரிவு: மீட்பு பணிக்கு அமெரிக்காவிடம் உதவி கேட்கிறது இலங்கை

By செய்திப்பிரிவு

இலங்கையின் பாதுளை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200 பேர் உயிருடன் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படும் சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசு கோரியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் ஜென் பசாகி கூறும்போது, “அமெரிக்காவின் உதவி கேட்டு இலங்கை அரசிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது. இலங்கை அரசுக்கும் மக்களுக் கும் பாதிக்கப்பட்டுள்ள குடும் பங்களுக்கும் அமெரிக்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கை அரசின் கோரிக் கையை ஏற்று துரித மாக செயல்படுமாறு ‘யு.எஸ். எய்டு’ அலுவலகத்தை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண் டுள்ளது.

மீட்பு மற்றும் தேடுதல் பணியில் விரைவாக செயல்பட்ட இலங்கை அரசு மற்றும் அதன் படைப்பிரிவுகளை பாராட்டுகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்