சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடி: இந்தியர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து திங்கள்கிழமை காலை சிட்னி நகருக்குச் சென்றடைந்தார்.

அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் (அபாரிஜின்கள்) பாரம்பரிய நடனமாடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு பூமராங் எனப்படும் கருவியும் பரிசாக அளிக்கப்பட்டது. பூமராங் எனும் கருவி வேட்டையாடுவதற்காக ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும்.

சிட்னி நகரில் அல்போன்ஸ் ஒலிம்பிக் பூங்காவில் மோடி உரையாற்றுகிறார். அவரது பேச்சைக் கேட்க இந்தியர்கள் 16,000 பேர் கூடுகின்றனர்.

மோடி பேச்சைக் கேட்க மெல்போர்ன் நகரில் இருந்து 200 இந்தியர்கள் 'மோடி எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்ட ரயிலில் சிட்னி புறப்பட்டுச் சென்றனர்.

1986-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆஸ்திரேலியா சென்றார். அதன்பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்வது இதுவே முதல் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 min ago

சினிமா

23 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்