நைஜீரியா மசூதியில் தற்கொலை தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்டிருந்த 120 பேர் பலி

By செய்திப்பிரிவு

நைஜீரியாவின் கனோ நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் 120 பேர் உயிரிழந்தனர். 270 பேர் காய மடைந்தனர்.

நைஜீரியாவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சரிசமமாக உள்ளனர். அங்கு இஸ்லாமிய ஷரியத் ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோஹாரம் தீவிரவாதி கள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டாம் முகமது சன்யூசி, போகோஹாரம் தீவிரவாதிகளை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில் கனோ நகரில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர்.

அதேநேரம் மசூதிக்கு வெளியே சில தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 120 பேர் உயிரிழந் தனர். 270 பேர் காயமடைந்தனர்.

முதல்கட்ட விசாரணையில் போகோஹாரம் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப் பது தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்