பாதுகாவலர்களை விலக்கிக்கொள்ள தயாரா?- ஹிலாரிக்கு டிரம்ப் சவால்

By பிடிஐ

"ஹிலாரியின் பாதுகாவலர்களே ஆயுதங்களை கீழே போட்டு ஹிலாரிக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்று பேசி குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் சர்ச்சை குள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவில் கொலை அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான அரசியல் சாசனத்தில் மாற்றத்தைக் கொண்டுவர திட்டம் வைத்திருப்பதாக ஹிலாரி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹிலாரியின் யோசனைக்கு பதிலளிக்கும் வகையில் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், "ஹிலாரியின் பாதுகாவலர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு நிராயுதபாணியாக நின்று ஹிலாரிக்கு என்ன நடக்கிறது என பாருங்கள்" என்றார்.

பாதுகாவலர்களைப் புறக்கணிக்க தயாரா என்ற தொணியில் ஹிலாரிக்கு சவால் விடுத்துள்ள டிரம்பின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களிடம் வன்முறையைத் துண்டுகிறார் டிரம்ப்

டிரம்பின் சர்ச்சை பேச்சுகளுக்கு பதிலடியாக ஜனநாயகக் கட்சியினர் ரியல் எஸ்டேட் அதிபர் அமெரிக்க மக்களிடம் தொடர்ந்து வன்முறையைத் தூண்டி வருகிறார் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

டொனால்டு டிரம்பின் இந்தப் பேச்சுகள் அதிபர் வேட்பாளர் பேச வேண்டிய பேச்சுகள் அல்ல என்று ஹிலாரி கிளிண்டனின் மேலாளர் ராபி மூக் டிரம்பை சாடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்