கென்யாவில் பஸ் பயணிகள் 28 பேர் சுட்டுக் கொலை

By ஏஎஃப்பி

கென்யாவின் வடகிழக்கில் சோமாலிய எல்லையையொட்டிய பகுதியில், துப்பாக்கி ஏந்திய சிலர் நேற்று காலை பஸ் ஒன்றை வழிமறித்து 28 பயணிகளை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட அனைவரும் முஸ்லிம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்கள். இத்தாக்குதலை ஷெபாப் தீவிரவாதிகள் நடத்தியிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கென்யாவின் துறைமுக நகரான மோம்பாசாவில் உள்ள மசூதிகளில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தினர். ஷெபாப் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களை தேடி இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஒருவர் கொல்லப் பட்டார். 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக இத்தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கென்யா 2011-ல் சோமாலியாவுக்குள் நுழைந்து, ஷெபாப் அமைப்பினர் மீது தாக்குதலை தொடங்கியது. பின்னர் ஆப்பிரிக்க யூனியன் படையில் தன்னை இணைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. என்றாலும் கென்யா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

சோமாலியாவிலிருந்து படை களை வாபஸ் பெறும்படி கென்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், 2013 செப்டம்பரில் நைரோபியில் உள்ள வணிக வளாகம் மீது ஷெபாப் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

38 mins ago

விளையாட்டு

43 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

இந்தியா

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்