விந்தணுவுக்கும் வந்துவிட்டது மொபைல் அப்ளிகேஷன்: பிரிட்டனில் முதல்முறையாக அறிமுகம்

By செய்திப்பிரிவு

பெண்கள் ஆன்லைன் மூலம் விந்தணு தானம் பெறுவதற்கான மொபைல் செயலி (ஆப்) பிரிட்டனில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள் ளது.

லண்டன் விந்தணு வங்கியில் அறிவியல் இயக்குனராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி மருத்துவர் கமால் அஹுஜா என்பவர் தான் தாய்மை அடைய ஏங்கும் பெண்களுக்காக இந்த மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

இந்த செயலியில் விந்தணு தானம் செய்த நபரின் ஒட்டுமொத்த தகவல்களும் சேகரித்து தொகுக்கப்பட்டிருக்கும்.

குறிப்பாக விந்தணு தானம் அளித்த நபரின் கல்வித் தகுதி, வேலை, தனிப்பட்ட குணங்கள், உயரம், நிறம், தலைமுடி, கண் இமை உள்ளிட்ட அத்தனை விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இதன் மூலம் நேரடியாக விந்தணு தானம் பெற தயங்கும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தாங்கள் விரும்பும் குணம் கொண்ட ஆண்களின் விந்தணுவை தேர்வு செய்து குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

செயலி மூலம் ஆர்டர் கொடுத்தவுடன் அந்த பெண் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கருத்தரிப்பு மையத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்கப் படும். இதற்கு கட்டணமாக ரூ.82,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலிக்கு ‘ஆர்டர் ஏ டாடி’ என பெயரிடப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

மேலும்