ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து லிபியா துறைமுகம் மீட்பு

By செய்திப்பிரிவு

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிர்தி துறைமுகத்தை லிபிய அரசுப் படைகள் மீட்டுள்ளன.

சிரியா, இராக் மட்டுமன்றி லிபியாவிலும் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த நாட்டின் முக்கிய துறைமுகமான சிர்தி துறைமுகம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமன்றி வேறு சில தீவிரவாத குழுக்களும் லிபியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த நாட்டின் உள்நாட்டு குழப்பத்துக்கு தீர்வு காண பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து முகமது யூசூப் அலி மெகரீப் தலைமையில் புதிய அரசை அமைத்துள்ளன. 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய அரசை ஐ.நா. சபையும் அங்கீகரித்துள்ளது.

சிரியாவில் ராக்கா, இராக்கில் மோசூல் நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்படுகின்றனர். அதேபோல லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகராக சிர்தி துறைமுக நகரம் விளங்கியது.

எனவே சிர்தியை கைப்பற்ற புதிய அதிபர் மெகரீப் ஆதரவு படைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரமாகப் போரிட்டு வந்தனர். அவர்களுக்கு அமெரிக்க கூட்டுப் படை பக்கபலமாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

கடுமையான போருக்குப் பிறகு சிர்தி துறைமுகம் தங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்திருப்பதாக அரசுப் படையின் தளபதி முகமது அல்-குர்ஷி நேற்று அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்