ட்ரம்ப் பாகிஸ்தானியர்களின் விசாவையும் ரத்து செய்ய வேண்டுகிறேன்: இம்ரான்கான்

By பிடிஐ

பாகிஸ்தானியர்களின் விசாவையும் ட்ரம்ப் ரத்து செய்ய வேண்டுகிறேன் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இன்சாஃப் கட்சியின் அரசியல் நிறுவனருமான இம்ரான்கான் கூறியுள்ளார்.

சிரியா அகதிகள் நுழைய நிரந்தரத் தடையும், ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதித்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் பல கண்டங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த தடை உத்தரவு குறித்து ஞாயிற்றுக்கிழமை இம்ரான்கான் கூறும்போது, "அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலுள்ள அரசு இஸ்லாமிய நாடுகளின் அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ட்ரம்ப் பாகிஸ்தானியர்களின் விசாவையும் ரத்து செய்ய வேண்டுகிறேன். அப்போதுதான் நாம் நமது நாட்டின் மீது கவனமாக இருப்போம். பெரும்பாலான படித்த பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிலிருந்து வெளியேற எண்ணுகின்றனர்.

பாகிஸ்தானிய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்ல முடியும். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் வர வேண்டும். நாம் நமது கால்களில் நிற்க வேண்டும். அமெரிக்காவிடம் இனி கை ஏந்தி நிற்க வேண்டாம்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

1 min ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

48 mins ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்