உலக மசாலா: சிலந்திப் பண்ணை!

By செய்திப்பிரிவு

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 28 வயது மிங் கு, கடந்த 7 ஆண்டுகளாக ராட்சத சிலந்திகளை வளர்த்துவருகிறார். இவரது வீட்டில் தற்போது 1,500 சிலந்திகள் இருக்கின்றன. ‘‘ஒருநாள் தோட்டத்தில் மிகப் பெரிய அழகான சிலந்தியைக் கண்டேன். விதவிதமாகப் படங்கள் எடுத்தேன். ஏனோ அந்த 8 கால் பூச்சி என்னை வசீகரித்தது. அதனை வளர்க்க விரும்பினேன். என் பெற்றோரிடம் சொன்னபோது அதிர்ந்து போனார்கள். என் ஆசையை ஓரமாக வைத்துவிட்டு, சிலந்திகளைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்தேன். என் ஆர்வத்தைக் கண்ட பெற்றோர், வீட்டில் சிலந்திகளை வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். விதவிதமான சிலந்திகளைத் தேடிப் பிடித்து வளர்க்க ஆரம்பித்தேன். சிலந்திகளுக்காக இதுவரை ரூ.35 லட்சம் செலவு செய்திருக்கிறேன். இவற்றுக்காகத் தனியாக ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். சிறியதும் பெரியதுமான ஜாடிகளில் வளர்கின்றன. இவற்றில் சில சிலந்திகள் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவை. மற்றவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டவை. இன்னும் இரண்டு வகை சிலந்திகள் கிடைத்துவிட்டால் என்னிடம் அத்தனை சிலந்தி வகைகளும் இருக்கும். ஒருநாளைக்குப் பத்து மணி நேரம் இவற்றுக்காகச் செலவிடுகிறேன். பெண் சிலந்திகள் கொன்று தின்று விடுவதால் ஆண் சிலந்திகளைத்தான் அடிக்கடி வாங்க வேண்டியிருக்கும். இதுவரை நான் சிலந்திகளை விற்பனை செய்ய நினைத்ததில்லை. ஆனால் அரிய வகை சிலந்திகள் இனப் பெருக்கத்தின் மூலம் அதிகரித்துவிட்டன. அதனால் தற்போது சிலந்தி வளர்ப்பைத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். இந்தோனேஷியா மட்டுமின்றி, ஆன்லைன் மூலம் இங்கிலாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளிலும் விற்பனை செய்துவருகிறேன். 7 ஆண்டுகளில் 14 தடவை சிலந்திகள் கடித்திருக்கின்றன. அதிக விஷமுள்ள சிலந்தி கடித்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாதுகாப்பாகக் கையாண்டால் சிலந்தி வளர்ப்பு மிகவும் சுவாரசியமானது” என்கிறார் மிங் கு.

சிலந்திப் பண்ணை!

வட கரோலினாவைச் சேர்ந்த 23 வயது மரின்னா ரோலின்ஸ், ராணுவத்தில் பணிபுரிந்தவர். மருத்துவக் காரணங்களால் வெளிவந்துவிட்டார். இவரும் இவருடைய காதலர் ஜார்ரென் ஹெங்கும் சேர்ந்து, பயிற்சியளிக்கப்பட்ட நாயை ஒரு மரத்தில் கட்டினர். அருகில் நின்று 5 முறை துப்பாக்கியால் சுட்டு, ஆனந்தமாகச் சிரித்தனர். பிறகு குழி தோண்டி நாயைப் புதைத்துவிட்டனர். இவை அனைத்தையும் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவர்கள், விலங்குகள் அமைப்பில் புகார் கொடுத்துவிட்டனர். தற்போது இருவரும் விசாரணையில் இருக் கின்றனர். பிணையில் வெளிவர முடியாத அளவுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்கிறார்கள் விலங்குகள் ஆர்வலர்கள்.

என்ன ஒரு கொடூரம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்