மங்கள்யான் வெற்றியின் ஒரு மாதத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்

By ஐஏஎன்எஸ்

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை அடைந்து ஒரு மாதம் ஆனதை நினைவூட்டி கொண்டாடும் வகையில் செவ்வாய் கிரக பயணம் கூகுள் டூடுலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்து இன்று அக்டோபர் 24-ஆம் தேதி உடன் ஒரு மாதம் ஆனதையொட்டி, கூகுள் தனது தேடுபொறி பக்கத்தில் டூடுல் மூலம் "மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷனை (MOM) கொண்டாடி உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஏற்கெனவே தங்களது விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி சாதனையை படைத்துள்ளன. இந்தியா இந்த பெருமையில் நான்காவது இடத்தை பெற்று ஆசியாவிலேயே முதல் நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட செவ்வாய் கிரக விண்வெளி பயணம் தோல்வியில் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

ஜோதிடம்

26 mins ago

வாழ்வியல்

31 mins ago

ஜோதிடம்

57 mins ago

க்ரைம்

47 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்