தேர்தலில் தோல்வி முகம் தெரிந்தாலும் கொள்கையில் பின்வாங்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் உறுதி

By செய்திப்பிரிவு

‘‘அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி முகம் தெரிந்தாலும் எனது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்’’ என குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிருபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டொனால்டு ட்ரம்ப் சர்ச்சைக்குரிய விதத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி வருவதால், அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிபர் ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின் டன் இருவரும் இணைந்தே ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நிறுவியதாக எழுப்பிய சர்ச்சைக் குரிய குற்றச்சாட்டு குறித்து அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘நான் உண்மையை தான் எடுத்துரைக்கிறேன். ஏனெனில் நான் ஒரு உண்மை விளம்பி. அதிபர் ஒபாமாவும், ஹிலாரி கிளின்டனும் ஐஎஸ் தீவிர வாத அமைப்பை கூட்டாக நிறுவியர்கள் என்று நான் தெரிவித்தது தவறல்ல. அரசியல் ரீதியாக சரியான கருத்துகளை முன்வைப்ப தாலும், சாமர்த்தியமாக பேசுவதாலும், எண்ணற்ற நல்ல சிந்தனை களைக் கொண்டிருப்பதாலும், தேர்தல் போட்டியில் எனக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தலில் நான் தோல்வி அடைந்தாலும் மீண்டும் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கே திரும்பி விடுவேன்’’ என்றார்.

இது குறித்து கிளின்டனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஜேக் சுலிவன் கூறும்பேது, ‘‘ரஷ்ய அதிபரின் கருத்துகளை தான் டொனால்டு ட்ரம்ப் இங்கு எதிரொலிக்கிறார்’’ என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்