அண்மையில் நேரிட்ட விமான விபத்துகள்

By செய்திப்பிரிவு

2013 ஜூலை 6: சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தென் கொரியாவின்

போயிங் 777 ரக விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்துக் குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காய மடைந்தனர்.

2012 ஜூன் 3: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 153 பேர் பலியாகினர்.

2012 மே 9: இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரஷ்யாவின் சுகோய் சூப்பர்ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் 45 பேர் இறந்தனர்.

2012 ஏப்ரல் 20: இஸ்லாமாபாத் அருகே நேரிட்ட விமான விபத்தில் 127 பேர் உயிரிழந்தனர்.

2011 செப். 7: ரஷ்யாவின் யாரோஸ்லாவல் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஹாக்கி வீரர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர்.

2011 ஜூலை 8: டி.ஆர்.காங்கோவின் கிஷான் கனி நகரில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையில் விழுந்து 74 பேர் உயிரிழந்தனர்.

2011 ஜன. 10: ஈரானின் யுரேமியா நகரில் நேரிட்ட விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

2010 ஜூலை 28: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் விமானம் மலையில் மோதி 152 பேர் உயிரிழந்தனர்.

2010 மே 22: இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2010 மே 12: லிபியாவின் திரிபோலி நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 103 பேர் உயிரிழந்தனர்.

2010 ஏப். 10: ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகரில் நேரிட்ட விமான விபத்தில் போலந்து அதிபர் லெக் காக்ஜியான்ஸ்கை உள்பட 97 பேர் பலியாகினர்.

2010 ஜன 25: லெபனானின் பெய்ரூட் அருகே எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்தனர்.

2009 ஜூலை 15: ஈரானின் குவாஸ்வின் நகரில் நேரிட்ட விமான விபத்தில் 168 பேர் உயிரிழந்தனர்.

2009 ஜூன் 30: கொமரோஸ் நாட்டின் கடல் பகுதியில் விமானம் விழுந்ததில் 150 பேர் உயிரிழந்தனர்.

2009 ஜூன் 1: அட்லான்டிக் கடலில் ஏர் பிரான்ஸ் விமானம் விழுந்ததில் 228 பயணிகள் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்