ஆர்லாண்டோ விடுதி தாக்குதல் திட்டம்: தீவிரவாதி மனைவிக்கு முன்கூட்டியே தெரியும்- விசாரணையில் புதிய தகவல் அம்பலம்

By பிடிஐ

ஆர்லாண்டோ கேளிக்கை விடுதி மீது தாக்குதல் நடத்த தீவிரவாதி ஒமர் மட்டீன் சதித் திட்டம் தீட்டி யிருந்ததை அவரது மனைவி முன்பே தெரிந்து வைத்திருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்லாண் டோவில் உள்ள தன்பாலின விடுதிக்குள் புகுந்து கடந்த 12-ம் தேதி ஐஎஸ் தீவிரவாதி ஒமர் மட்டீன் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஸ்வாட் போலீஸார் அதிரடி தாக்குதல் நடத்தி ஒமர் மட்டீனை சுட்டுக் கொன்றனர். அத்துடன் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த 100 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் கேளிக்கை விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக ஒமர் மட்டீன் திட்டம் தீட்டியிருந்ததை அவரது 2-வது மனைவியான நூர் ஜஹி சல்மான் தெரிந்து வைத்திருந்த தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

தாக்குதல் நடத்துவதற்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஒமர் வாங்கிய போது தானும் உடனிருந்ததாகவும், பல்ஸ் நைட் கிளப்புக்கு ஏற்கெனவே ஒருமுறை ஒன்றாக சென்றதாகவும் எப்பிஐ அதிகாரிகளிடம் நூர் ஜஹி தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலை கைவிடும்படி ஒமரிடம் அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சதித் திட்டத்தை போலீஸாரிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்துக்காக நூர் ஜஹி மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து எப்பிஐ அதிகாரிகள் விரிவாக ஆலோசித்து வருகின்றனர். எனினும் விசா ரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்து வருவதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

தீவிரவாதி ஒமர் தன்பாலின உறவில் ஈடுபாடு உள்ளவர் என்றும் வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்டார் என்றும் முதல் மனைவி சித்தோரா யூஸுபி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

17 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

52 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

37 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்