பாகிஸ்தானில் அமெரிக்க உயர்நிலைக் குழு

By பிடிஐ

பாகிஸ்தான் உடனான உறவு களை சீரமைப்பதற்காக அமெரிக்க உயர்நிலைக் குழு நேற்று இஸ்லாமாபாத் வந்தது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங் களை கவனிக்கும் முதுநிலை இயக்குநர் பீட்டர் லாவோ, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஆல்சன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை சந்தித்து பேச வுள்ளனர். பாகிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஆளில்லா விமான தாக்குதல், ராணுவ விவகாரங்கள், ஆப்கானிஸ்தானில் மேற்கொள் ளப்படும் நல்லிணக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 21-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார். இது பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிரானது என அந்நாடு கண்டனம் தெரிவித்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் அமைதி முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள் ளதாகவும் பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் எப்-16 ரக போர் விமானங்கள் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் தடை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ் தான் உடனான உறவை சீரமைக்கும் வகையில் அமெரிக்க உயர்நிலைக் குழு இஸ்லாமாபாத் வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

தமிழகம்

8 mins ago

க்ரைம்

52 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

57 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்