விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தங்கம் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும்

By பிடிஐ

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை, அவற்றின் உரிமையாளர்களான தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, 2,377 சட்டப் பூர்வ உரிமையாளர்கள் அடையா ளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள் ளது.

இலங்கை உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வசித்த மக்கள், தங்களின் தங்க நகைகளை விடுதலைப் புலிகளிடம் அடகு வைத்திருந்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு நடை பெற்ற இறுதிக்கட்டப்போரில், விடுதலைப் புலிகளிடமிருந்து ஏராள மான தங்க நகைகளை, இலங்கை ராணுவம் கைப்பற்றியது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நகைகள் ராணுவத்தின் கட்டுப் பாட்டில்தான் உள்ளன.

இதுதொடர்பாக பல்வேறு குற்றச் சாட்டுகளை தமிழ் அமைப்புகள் ராணுவத்தின் மீது சுமத்தி வந்தன. இதைத்தொடர்ந்து, நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க இலங்கை ராணுவம் முடிவு செய் துள்ளது.

இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கைப்பற்றப்பட்ட அனைத்து நகைகளும் அதிபரின் உத்தரவின்பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த நகைகள் மீது இதுவரை கோரப்பட்ட 2,377 சட்டப்பூர்வ உரிமைகள் அடை யாளம் காணப்பட்டுள்ளன.

நகைகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கான நடவடிக்கை கள் தொடங்குவதன் அடையாள மாக வரும் ஞாயிற்றுக்கிழமை 25 பேருக்கு, அதிபர் ராஜபக்ச நகைகளைத் திரும்ப ஒப்படைப் பார். ராணுவத்தின் மீது, விடுதலைப் புலிகளில் எஞ்சியவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை புறம் தள்ளும் விதத்தில் இந்நடவடிக்கை அமையும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

சுற்றுலா

43 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்