நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார்: உறுதிப்படுத்தும் ஜப்பான் அரசு ஆவணம்

By செய்திப்பிரிவு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த விவரங்கள் கொண்ட, ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் ஒன்று இணையதளத்தில் வெளி யாகியுள்ளது. அதில், 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் விமான விபத் தில் நேதாஜி இறந்து விட்டார் என்றே உறுதியாக கூறப்பட்டுள்ளது.

நேதாஜியின் இறப்பு தொடர் பான முடிவுகள், அப்போதைய சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்கள் குறித்த தகவல்களை திரட்டி, தொகுத்தளித்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த ‘போஸ்ஃபைல்ஸ்’ இணைய தளம் மூலம் இந்த ஆவணம் பொது மக்கள் பார்வைக்கு வெளியானது.

‘நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இறப்புக்கான காரணம் மற்றும் அவரின் இதர விவகாரங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆவணத்தை இதுவரை இந்திய, ஜப்பானிய அரசுகள் ரகசியமாக வைத்திருந்ததாக அந்த இணைய தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 1956 ஜனவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, டோக்கியோ வில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜப்பான் அதிகாரிகள் இதனை சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு, இரு தரப்பிலும் இந்த ஆவணம் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படவில்லை.

ஜப்பானிய மொழியில் 7 பக்கங் களும், ஆங்கில மொழிபெயர்ப்பில் 10 பக்கங்களும் கொண்ட அந்த ஆவணத்தில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி விமான விபத் தில் சிக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அன்றைய தினமே தைப்பே நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆவணத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேதாஜி உள்ளிட்டோர் இருந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு, 20 மீட்டர் உயரத்தை அடைந்த சமயத்தில், விமானத்தின் இடதுபக்க இறக்கையில் இருந்த விசிறி ஒன்று திடீரென உடைந்து, இயந்திரம் கீழே விழுந்தது.

இதனால் நிலை தடுமாறிய விமானம், அருகில் இருந்த சரளைத் தளத்தின் மீது மோதி, தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் பயங்கர தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட போஸ், உடனடியாக தைப்பே ராணுவ மருத்துவமனையின் நம்மோன் கிளையில் அனுமதிக் கப்பட்டார்.

அதேநாளில் இரவு 7 மணிக்கு போஸ் இறந்துவிட்டார். ஆகஸ்ட் 22-ம் தேதி தைப்பே முனிசிபல் எரியூட்டு மயானத்தில் நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, 1956-ம் ஆண்டில் அப் போதைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்ட ஷா நவாஸ் கான் தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையை உறுதிப் படுத்தும் வகையில் ஜப்பானிய ஆவணத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

எனினும், இந்த அறிக்கையை ஏற்க முடியாது என, நேதாஜி யின் உறவினரும், பாஜக உறுப் பினருமான சந்திரபோஸ் தெரிவித் துள்ளார். மேலும், ‘நீதிபதி முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி எந்த விமான விபத்தும் நிகழவில்லை என, தைவான் அதிகாரிகள் எழுத்துப்பூர் வமாக தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, தகனம் செய்யப் பட்டதாக கூறப்படும் நேரம் போன்ற வற்றிலும் ஜப்பான் ஆவணத்தில் முரண்பாடான தகவல்கள் உள்ளன. எனவே, இதை இறுதியானதாக கருத முடியாது’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்