கவுதமாலா காப்பக தீ விபத்தில் 29 இளம் பெண்கள் பலி

By பிடிஐ

கவுதமாலா தலைநகர் கவுத மாலா சிட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சான் ஜோஸ் பினுலா என்ற இடத்தில், ‘வர்ஜின் டி அசுன்ஷன்’ என்ற பெயரில் ஒரு காப்பகம் உள்ளது. அரசு சார்பில் செயல்படும் இதில் ஆதரவற்ற குழந்தைகள், சிறுவர் கள் உள்ளிட்ட 18 வயதுக்குட் பட்டவர்கள் தங்கி உள்ளனர்.

இந்த காப்பகத்தில் அனுமதிக் கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக சிறுவர்கள் தங்க வைக்கப்பட் டுள்ளனர். இதனால் இவர்களுக் குள் மோதல் ஏற்பட்டதுடன் சிலர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, சிலரை காப்பக அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில்தான் மெத் தையை சிலர் கொளுத்தி உள்ள னர். இதனால் தீ மளமளவென பரவியதாகக் கூறப்படுகிறது. இதில் 29 பேர் பலியாயினர். மேலும் தீக் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவ மனையை முற்றுகை யிட்டுள்ள பெற்றோர், தங்கள் பிள் ளைகள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

44 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்