வடகொரியாவுக்கு சீனா ஆதரவு

By செய்திப்பிரிவு

வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக்கூடாது, அதற் குப் பதிலாக அந்த நாட்டுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை களை நடத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

வடகொரியா அண்மையில் 5-வது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியிருப்பதாவது:

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியதை சீனா கடுமையாக கண்டிக்கிறது. அதே நேரம் அந்த நாட்டின் மீது பொருளா தார தடைகள் விதிப்பதால் எவ்வித பயனும் இல்லை. அதற்குப் பதிலாக வடகொரியாவுடன் ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே வடகொரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய வெளியு றவு அமைச்சர்கள் வரும் 18-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது வடகொரியாவுக்கு எதி ராக கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்