ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்

By செய்திப்பிரிவு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி, அவரது பொறுமையை பாராட்டுகிறேன் என்று அமெரிக்கா வின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட் பாளர் ஹிலாரி கிளின்டன் தோல் வியைத் தழுவினார். அவரது தோல்விக்கு ரஷ்ய உளவுத் துறை யின் ‘சைபர் ஹேக்கிங்’ சதி செயலே காரணம் என்று தற் போதைய அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகங்களில் பணியாற்றும் 35 அதிகாரிகளை வெளியேற்ற அதிபர் ஒபாமா நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். மேலும் ரஷ்ய உளவு அமைப்புகள், சில ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியபோது, பழிக்குப் பழி நடவடிக்கையாக அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற விரும்பவில்லை. பொறுத்திருந்து நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

புதினின் முடிவை அமெரிக்கா வின் புதிய அதிபராக பதவி யேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இதுதொடர் பாக அவர் ட்விட்டரில் நேற்று வெளி யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி என்பது எனக்கு தெரியும். அதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது நிதானம், பொறுமையைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்