ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு விற்க வேண்டும்: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்

By பிடிஐ

இந்தியாவின் கடலோர கண் காணிப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப வசதி கொண்ட ஆளில்லா உளவு விமானங்களை விற்குமாறு, அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் மூத்த எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக கட்சியின் எம்.பி.யான மார்க் வார்னர் மற்றும் குடியரசுக் கட்சியின் எம்.பி.யான டேன் சுல்லிவன் இருவரும் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘ஒபாமா ஆட்சியின்போது பாது காப்பு துறையின் முக்கிய கூட்டாளி யாக இந்தியா இணைக்கப்பட்டது. இத்துறையில் அடுத்தக் கட்ட நிலை யில் இருதரப்பு உறவுகளையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

ஆசிய பசிபிக் பகுதியில், அதிலும் குறிப்பாக தென் சீன கடல் பகுதியில் இந்திய அமெரிக்க கூட்டுறவு அவசியம் தேவை என இருவரும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியா அமெரிக்கா இடையே பொதுவான பலனை மையமாக கொண்டு இரு நாட்டு ராணுவமும் கூட்டு பயிற்சியில் ஈடுபட வேண் டும் என்றும் எம்.பி. சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

உளவுத் துறையின் செனட் சபை தேர்வு குழுவில் முக்கிய உறுப்பினராக பதவி வகித்து வரும் வார்னர் கூறும்போது, ‘‘இந்தியாவின் கடலோர கண் காணிப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப வசதி கொண்ட ஆளில்லா உளவு விமானங்களை அமெரிக்கா விற்க வேண்டும். இதன்மூலம் இரு நாட்டுக்கும் இடையேயான பாதுகாப்பு கூட்டுறவு அடுத்தக் கட்டத்துக்கு செல்லும்’’ என்றார்.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்த கேள்விக்கு வார்னர், ‘‘உளவு சார்ந்த விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா இடையே வலுவான கூட்டுறவு இருந்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் அமைதி யின்மைக்கு பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்து வருவது கவலை அளிக்கிறது.

அதுமட்டுமின்றி பாகிஸ் தானில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளுக்கும் இதில் அதிக அளவில் பங்கு இருப்பதும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே, மறுபுறம் அந்த தீவிரவாத குழுக் களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போல பாகிஸ்தான் நடித்து வருகிறது. இத்தகைய நடவடிக் கையில் பாகிஸ்தான் நிச்சயம் ஈடுபடக் கூடாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்