ஐ.நா. தலைவராக பீட்டர் தாம்சன் தேர்வு

By செய்திப்பிரிவு

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) பொது சபையின் தலைவராக பிஜி நாட்டைச் சேர்ந்த பீட்டர் தாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற உள்ளது.

சர்வதேச பிரச்சினைகளை தீர்த்தல், அமைதியை நிலைநாட்டல் உட்பட பல்வேறு முக்கிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது ஐ.நா. இந்த அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது ஐ.நா. பொதுச் சபை தலைவராக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் பதவி வகிக்கிறார். பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.

மோகென்ஸ் பதவிக் காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒருமித்த கருத்து ஏற்படாததால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் பிஜி நாட்டை சேர்ந்த பீட்டர் தாம்சன், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் மவ்ரோயினிஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. எனினும், தேர்தலில் பீட்டர் தாம்சன் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தாம்சனுக்கு 94 உறுப்பினர்களும் ஆண்டிரியாஸுக்கு 90 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். இதையடுத்து ஐ.நா. தலைவராக தாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ.நா. பொதுச் செயலாளராக உள்ள பான் கி மூனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. இவர் 2-வது முறையாக பதவி வகிக்கிறார். பொதுச் செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.

எனவே, புதிய பொதுச் செய லாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பீட்டர் தாம்சன் தலைமையில் பொதுச் செயலாளர் பதவி நடக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்