சீனாவுக்கு மீண்டும் கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்கா

By செய்திப்பிரிவு

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் கூடுதலாக வரி விதித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25% சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாயமான வர்த்தகம் அல்ல. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர் வரை அதாவது  4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த வரி நடைமுறைக்கு வர இருப்பதாக அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா தங்கள்  நாட்டின் மீது வர்த்தக வரியை அறிமுகப்படுத்த இருந்தால் அந்த நாட்டுடன் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் ரத்து செய்யப்படும் என்று சீனா கூறியது.

வர்த்தகப் போட்டி காரணமாக அண்மையில் இரு நாடுகளும் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் சீனப் பொருட்களுக்கு மீண்டும் வரி விதிப்பை அதிகரிக்கக் கூறி ட்ரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்படி, எலக்ட்ரானிக் பொருட்கள், நாற்காலிகள், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள்  உள்ளிட்ட சில பொருட்களுக்கு இறக்குமதி வரியை 200 மில்லியன் டாலர் வரை உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வரி விதிக்கும் பொருட்களுக்கான இறுதிப் பட்டியலை விரைவில் தயாரிக்கும்படியும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

12 mins ago

விளையாட்டு

18 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்