பாலஸ்தீன அகதிகளின் நிதியை நிறுத்திய அமெரிக்கா

By செய்திப்பிரிவு

பாலஸ்தீன அகதிகளுக்கு பல வருடங்களாக வழங்கி வந்த உதவித்தொகையை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ட்ரம்ப் நிர்வாகம் ஆழமான வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை அடைந்துள்ளது. நாங்கள் இனி ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த அகதிகளுக்கான நிதித் தொகை மற்றும் இதர மறுகட்டமைப்புப் பணிகளுக்கான நிதியை நிறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவின் மூலம் கிட்டத்தட்ட பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்காக அமெரிக்கா வழங்கவிருந்த 300 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தியுள்ளது.

முன்னதாக, பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதிகளில் நிர்வாகம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்த அமெரிக்கா அளிப்பதாக இருந்த நிதியுதவியை நிறுத்துமாறு ட்ரம்ப் கூறினார் என்று கடந்த வாரம் வெள்ளை மாளிகை தரப்பில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அமெரிக்கா தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிக்கை வெளியாகியுள்ளது.  

கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் பகுதி ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபுப் போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. 

பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன. 

இந்த நிலையில், கடந்த மாதம் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம் - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்