மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை

By செய்திப்பிரிவு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்தியா வரும் மைக் பாம்பியோ புதன்கிழமையன்று  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  மற்றும் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர், மைக் பாம்பியோவுக்கு விருந்தளிக்க உள்ளார்.

பாம்பியோவின் இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் வர்த்தகம் சார்ந்த உறவுகள், பொருளாதார வளர்ச்சி, பரந்த அரசியல், பாதுகாப்பு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, இந்தியப் பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

மேலும்