ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற இந்தியாவுக்கு 55 நாடுகள் ஆதரவு

By செய்திப்பிரிவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினர் அல்லாத இடத்துக்கான இந்தியாவின் வேட்புமனுவை 55 நாடுகள் ஆதரித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்அல்லாத  இடத்துக்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத் தீவு, மியான்மர், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, இலங்கை, வியட் நாம் உள்ளிட்ட 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அடுத்த இரண்டாண்டுகாலம் அதாவது  2021 - 2022 வரை, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத  5 இடங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் வேட்புமனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ஐ. நாவுக்கான  நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் கூறும்போது, “ இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்