அளவுக்கதிகமாக எடையுள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் இரட்டிப்பாகும்: ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

அளவுக்கதிகமான எடைள்ள குழந்தைகளுக்கு இரட்டிப்பு ரத்த அழுத்தம் ஏற்படும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

மாறிவரும்  வாழ்க்கைச் சூழலில் உடல் பருமன் அதிகரிப்பே இன்றைய தலைமுறையினருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட உணவு முறை, வாழ்கை முறை மாற்றங்களுக்கு பலரும் தங்களை உட்படுத்தி கொள்கிறார்கள்.

இந்த நிலையில் உடல் பருமன் காரணமாக குழந்தைகளுக்கு இரட்டிப்பு ரத்த அழுத்தம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

இது தொடர்பான மருத்துவ ஆய்வு அறிக்கையை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான ஸ்பெயினின் இனாகி கேலான் கூறும்போது,”எடை அதிகமுள்ள குழந்தைகளுக்கு இரட்டிப்பான ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன்காரணமாக எதிர்காலத்தில் மாரடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதனை தவிர்க்க குழந்தைகளை உடற்பயிற்சிகளில் பெற்றோர் ஈடுபடுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை அளிக்க வேண்டும்.

பிரசவ காலங்களில் பெண்கள் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்” என்றார்.

சுமார் 1000க்கு மேற்பட்ட குழந்தைகளில் மேற்கொண்ட மருத்துவ ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்