ஜி- 20 மாநாடு நாளை தொடக்கம்: ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச பிரதமர் மோடி திட்டம்

By செய்திப்பிரிவு

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இதில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று காலை ஒசாகா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் ஜப்பானில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கற்ற அவர் அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் அபேவை சந்தித்து பேசினார். அப்போது, உலகளாவிய பொருளாதார பிரச்சினைகள், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 4 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக இந்திய விரைவில் உயரும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரையிலும், கிழக்கு முதல் மேற்கு வரையிலும் பல்வேறு முதலீடுகளை ஜப்பான் செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கார் உற்பத்தி வளர்ச்சி பெற ஜப்பான் பெரிய அளவில் உதவியது. தற்போது புல்லட் ரயில் சேவைக்கும் ஜப்பான் உதவுகிறது. இந்தியாவில் அதிகஅளவு ஜப்பான் முதலீடு செய்து வருகிறது. இதற்கு அந்த நாட்டிற்கு நன்றி

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், தென்கொரியா அதிபர் மூன்ஜே, ஜெர்மன் தலைவர் ஏஞ்சலா மெர்கல்  உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

சினிமா

7 mins ago

உலகம்

21 mins ago

விளையாட்டு

28 mins ago

ஜோதிடம்

10 mins ago

ஜோதிடம்

57 mins ago

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்