நேபாள அதிபராக வித்யா தேவி மீண்டும் தேர்வு

By செய்திப்பிரிவு

நேபாள அதிபராக வித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

நேபாள நாட்டின் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பண்டாரி 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

இதையடுத்து அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கட்சி வித்யா தேவி பண்டாரிக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் வித்யா தேவிக்கு சிபிஎன் (மாவோயிஸ்ட் சென்டர்), சங்கியா சம்பஜ்வாதி கட்சி-நேபாளம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இவருக்குப் போட்டியாக நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் லஷ்மி ராய் போட்டியிட்டார். இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் வித்யா தேவி பண்டாரிக்கு 23,356 ஓட்டுகள் கிடைத்தன.

நேபாளி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லக்ஷ்மி ராய்க்கு 10,319 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. மேலும் சாங்கியா சம்பஜ்வாடி கட்சி-நேபாள் உள்ளிட்ட கட்சிகள் பண்டாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருக்கு 26,921 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து நேபாளத்தின் அதிபராக 2-வது முறையாக வித்யா தேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாள அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பர். - பிடிஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்