64 பேர் பலியானதற்கு அலட்சியமும் மெத்தனமுமே காரணம்: புதின்

By செய்திப்பிரிவு

ஷாபிக் மால் விபத்தில் 64 பேர் பலியானதற்கு அலட்சியமும் மெத்தனமுமே காரணம் என்று ரஷ்ய அதிபர்புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சைபீரிய மாகாணத்தில் உள்ள கெமரோவா நகரத்தில் ‘வின்டர் செர்ரி மால்’ என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு தியேட்டர்கள், குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், பொழுதுபோக்கு கடைகள் உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்தக் கட்டிடத்தின் மேல் தளங்களில் திடீரென தீ பற்றியது.

இதில் குழந்தைகள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர். இந்த தீவிபத்தில் 64 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள். சமீபத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது.

இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விபத்து நடந்த சைபீரியாவுக்குச் சென்று ஷாப்பிங் மாலை பார்வையிட்ட ரஷ்ய அதிபர் புதின் இந்த தீ விபத்து குறித்து கூறும்போது, "என்ன நடக்கிறது இங்கு? இது எதிர்பாராதது. குழந்தைகளும் பெண்களும் இங்கு ஓய்வெடுக்க வந்திருக்கிறார்கள். நாம் மக்கள் தொகையை பற்றி பேசுகிறோம். ஆனால் இங்கு பல உயிர்களை நாம் இழந்திருக்கிறோம் இதற்கு அலட்சியமும் மெத்தனமுமே காரணம்” என்றார்.

64 உயிர்களை பலி கொண்ட இந்த தீ விபத்துக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை. இது குறித்து ரஷ்ய போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தீ  விபத்தில் உயிரிழந்தர்களுக்கு  ரஷ்யா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

வலைஞர் பக்கம்

46 mins ago

கல்வி

39 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

42 mins ago

ஓடிடி களம்

49 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்