தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புகிறேன்: கிம் ஜோங் உன்

By செய்திப்பிரிவு

தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வட கொரியா பங்கேற்றது முதல் தென் கொரியா - வட கொரியா இடையே இணக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பில் திங்கட்கிழமை தென் கொரிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வட கொரிய அதிபர் கிம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வட கொரியாவுக்கு தென் கொரிய அதிகாரிகளின் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பு குறித்து வடகொரிய ஊடகங்கள், "தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக கிம் தெரிவித்தார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தென் கொரிய அதிகாரிகள் தரப்பில், "இந்தச் சந்திப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. இரு தரப்பில் வைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் திருப்திகரமாக உள்ளன. இது எதிர்கால பேச்சுவார்த்தைகளிலும் தொடரும் என்று எதிர்பார்கிறோம்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்