பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’

By ஐஏஎன்எஸ்

பேஸ்புக் நிறுவனத்தின் தகவல்களை ‘கசிய’ விடும் ஊழியர்களை கண்டறிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுகர்பெர்க், ‘ரகசிய போலீஸ் படையை’ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைதளங்களில் முக்கிய நிறுவனமான பேஸ்புக் அதிரடி செயல்பாடுகள் மூலம் பல கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதற்காக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுகர்பெர்க் சிறப்பு குழுவினரை அமைத்து நாள்தோறும் புதிய புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் பேஸ்புக் வெளியிடும் திட்டங்கள் சில முன்கூட்டியே போட்டி நிறுவனங்களுக்கு கசிந்து விடுவதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் உரையாறும் ஜுகர்பெர்க், நிறுவனத்தின் பலதளங்களில் நடைபெறும் கூட்டங்களில் தனது திட்டங்களை அறிவித்து வருகிறார். அப்போது சில ஊழியர்கள் உளவாளிகளாக இருந்து வேறு நிறுவனங்களுக்கு தகவல்களை கசிய விடுவதாக அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக மார்க் ஜுகர்பெர்க் ரகசிய படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த ரகசிய போலீஸ் படையை சேர்ந்வர்கள் பேஸ்புக் ஊழியர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களின் தொலைபேசி, இணைய பதிவுகள் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து அவர்களுகள்ள தொடர்புகள் தொடர்பான தகவல்களை திரட்டுகின்றனர். எலியை பொறி வைத்து பிடிப்பது போல ஊழியர்கள் தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது பிடித்து விடுவது இந்த ரகசிய படையின் சிறப்பு.

வாரந்தோறும் மார்க் ஜுகர்பெர்க் கூட்டம் நடத்தி புதிய தயாரிப்புகள், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிவித்த உடன் அதுபற்றி தகவல்கள் உடனடியாக வெளியே செல்வதை இந்த ரகசிய படை கண்காணிக்கிறது. பேஸ்புக் தொடர்பான தகவல்களை போட்டி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட நிறுவனத்திற்கு தொடர்பு அல்லாத பிறருக்கு தெரிவிப்பவர்ளையும் இந்த ரகசிய படை கண்டுபிடிக்கிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலருக்கு, சமீபத்தில் பதவி உயர்வு தொடர்பாக விவாதிப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தங்கள் பதவி உயர்வை எண்ணி மகிழ்ச்சியுடன் சென்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பேஸ்புக் தொடர்பான சில தகவல்களை அவர்கள் பிறருக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பான ஆதாரங்களுடன் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விசாரணை அதிகாரிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். பின்னர் பதவி உயர்வு கிடைக்கும் என எண்ணிய ஊழியர்களுக்கு பதவி நீக்கமே கிடைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்